Search This Blog

Friday, April 16, 2010

உபநயனம் பற்றி உபந்யாசம் - என்.வி.எஸ்

ஸ்ரீ:

நமோ தர்மாய மஹதே நம:க்ருஷ்ணாய வேதஸே
ப்ராஹ்மணேப்யோ நமஸ்க்ருத்ய தர்மாந் வக்ஷPய ஸநாதநாந்!
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாய ச
ஜகத்ஹிதாய ஸ்ரீ க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:
ஜன்மனா ப்ராம்மணோ ஜ்ஞேய: ஸம்ஸ்காரை: த்விஜ உச்யதே
விப்ரத்வம் வித்யயா சாபி த்ரிபி: ச்ரோத்ரிய உச்யதே! !
பிறப்பினால் ப்ராம்மணன், ஸம்ஸ்காரங்களினால் த்விஜன் எனப்படுகிறான். விப்ர என்பது வித்யையால் உண்டாகிறது. இம்மூன்றும் சேர்ந்தால் ச்ரோத்ரியன் எனப்படுகிறான்.
ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் இரு ஜன்மத்தினர் என்று கூறப்படுவர். பிறப்பினால் ஒரு ஜன்மமும், ஸம்ஸ்காரங்களால் மற்றொரு பிறவியும் எடுத்தலால் ‘த்விஜன்” அழைக்கப்படுகின்றனர். வேத சாஸ்த்ர அப்யாஸத்தால் ப்ராஹ்மணன் விப்ரன் ஆகிறான். ப்ராஹ்மணத்துவம், ஸம்ஸ்காரம், விப்ரத்வம் மூன்றும் ஒன்று சேர்ந்தால் அவன் ச்ரோத்ரியன் ஆகிறான். இந்த ச்ரோத்ரியனே மனிதர்களில் சிறந்தவன். அதிலும் அவன் ஆசையற்றவனனால் மிகச் சிறந்தவன். தைத்ரீய உபநிஷத் கூறும் ஆனந்த ஸோபாநத்தில் இவனே முதற்படி. வைச்வதேவத்தில் ‘அகாமோபஹதாய ச்ரோத்ரியாய ஸ்வாஹா” என இப்படிப்பட்டவர்களுக்காக ஒரு ஹோமம் செய்யப்படுகிறது.
ஸத்யம் வத, தர்மம் சர என்று நம்முடைய வேதம் சொல்லுகிறது.
தர்மத்தைச் செய்தோமானால் அதனால் லோகத்துக்கே Nக்ஷமம் நமக்கும் Nக்ஷமம். தர்மத்தை லோகத்துல எல்லாருக்கும் சொல்லணும். தர்மத்தை இந்த காலத்துல எவன்யா கேட்பான்னா கேட்கட்டும் கேட்காதபோகட்டும் அதப்பத்தி கவலையில்லை தர்மத்தைச் சொல்லவேண்டியது நம் கடமை.

பகவான் தர்மஸ்ய ப்ரபுரச்யுத: தர்மஸம்ஸ்தாபனார்த்தம் ஸம்பவாமி
ராமோ விக்ரஹவாந் தர்ம: தர்மயோநி: ஜநார்தன:
என்றெல்லாம் தர்மத்தோட ஸம்பந்தப்படுத்தியேதான் பகவானைச் சொல்றது இதிகாச புராணங்களெல்லாம். தர்மத்தை ஆதாரமாகக் கொண்டுதான் பகவானை அடைய முடியும். தர்மம் இல்லையானால் பக்தி இல்லை, தர்மம் இல்லையானால் ஜ்ஞானம் இல்லை. தர்மத்தை உட்டுட்டானானால் பக்தியினால மட்டும் பகவான் சந்தோஷப் பட்டுடுவானா? இப்படிப்பட்டவாள எனக்கு துரோகின்றான் பகவான்.
‘ச்ருதி ஸ்ம்ருதிர் மமை வாக்ய: யஸ்தாம் உல்லங்க்ய வர்த்ததே
ஆஜ்ஞாசேதி மம த்ரோகி மத் பக்தோபி ந வைஷ்ணவ:”
என்கிறான் பகவத் கீதையில். பகவத் பக்தி இருக்குன்ற அகம்பாவத்துனால எவன் தர்மத்தை உட்டுடறானோ அவன் எனக்கு த்ரோகி என்று பகவான் சொல்லுகிறான். தர்மத்தினுடைய அடிப்படையிலதான் பக்தி. தர்மத்தினுடைய அடிப்படையிலதான் ஜ்ஞானம் அப்படிங்கறபொழுது, அடிப்படை மனிதப் பண்புதானே? மனிதப் பண்பு இல்ல ம்ருகத்தனம்தான் இருக்குன்னா அவன் என்ன பண்ணிதான் என்ன? முதல்ல மனித பண்பு. தர்மம் என்பது ஸ்வபாவம். மனித ஸ்வபாவம் இது என்று நிர்ணயம் பண்ணி ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். மனித ஸ்வபாவம் என்பது ப்ரத்யேகமாக ப்ராஹ்மண சமூகத்துக்கு மட்டும் இல்லே. பாரத தேசத்துக்கு இல்லே, உலகத்துக்கே இந்த தர்மத்தைச் சொல்றது அவசியமாகிறது. உலகத்துல உள்ள எல்லாருக்கும் தர்மத்தைச் சொல்லணும், அவரவர்களுக்கு உரியதாகிய தர்மத்தை அவரவர்கள் தெரிஞ்சுகொள்ளும்படியாக சொல்லணும். தர்மத்துக்கு எது ப்ரமாணம் என்றால் வேதம்தான் ப்ரமாணம். அவளாவளுக்கு தோன்றியது தர்மம் ஆகாது. வேதா: ப்ரமாணம் என்று மனு முதலிய பெரியோர்கள் தர்மத்துக்கு வேதம்தான் ப்ரமாணம் என்று சொன்னார்கள். அந்த வேதத்தில உள்ள தர்மத்தை நமக்கு விளக்குவதற்காகத்தான் ரிஷிகள் எல்லாம் ஸ்ம்ருதிகள் எழுதினார்கள். ச்ருதி, ஸ்ம்ருதி இது ரெண்டும் ப்ரமாணம் ஆகிறது. ஏட்டுல இருந்தா போறாது. ச்ருதி ஸ்ம்ருதி இது ரெண்டையும் அநுஷ்டானத்துல கொண்டுண்டு வரணும். ச்ருதி, ஸ்ம்ருதி பஹ{வா இருக்கறதுனாலே அத நிர்ணயம் பண்ணி சுருக்கமா மனசுல நெனைவு வச்சுக்கும்படி ஜனங்களுக்குச் சொல்லணும் என்பதற்காக தர்ம சூத்ரகாரர்கள் ஏற்பட்டார்கள். அந்தந்த வேதங்களுக்கு தனித்தனியான சூத்ரகாரர்கள் உண்டு. ருக் வேதம்னா அதற்கு ஆச்வலாயனர் சூத்ரகாரர். யஜுர் வேதத்திற்கு ஆபஸ்தம்பர், போதாயனர், சத்யாஷாடர் முதலியோர் சூத்ரகாரர்கள். சுக்ல யஜுர்வேதத்திற்கு காத்யாயனர், ஸாம வேதத்திற்கு த்ராஹ்யாயனர் அவர்கள் ஏற்படுத்திய சூத்திரங்களுடைய அடிப்படையிலதான் இப்பொழுது உள்ள ப்ரயோகங்கள் எல்லாம் அமைஞ்சிருக்கு. சூத்ரகாரர்கள் நாலு விதமாக கர்ம காண்டத்தை பிரித்து நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். தர்ம சூத்ரம், க்ருஹ்ய சூத்ரம், ச்ரௌத சூத்ரம், சுல்ப சூத்ரம் என்று நான்கு விதமாக பிரிச்சு சொன்னார்கள். அதில் தர்ம சூத்ரம் அப்படிங்கறது வர்ணாச்ரம தர்மங்கள் அதற்கு வேண்டிய ப்ராயச்சித்தம் முதலியவைகளை ‘அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா“ என்று ஆரம்பித்து தர்மங்களைச் சொல்லுகிறது. ஜைமினி சூத்ரம் ச்ரௌத விஷயங்களைச் சொல்லக்கூடியது. வர்ணாச்ரம தர்மங்களால் சொல்லப்பட்ட தர்மங்களில் அநுஷ்டானத்துல ஒரு க்ருஹஸ்தன் செய்ய வேண்டிய என்னென்ன ஸம்ஸ்காரங்கள் உண்டோ அதையெல்லாம் சொல்லுவதற்காக ‘க்ருஹ்ய சூத்ரம்” என்பது சொல்லப்பட்டுள்ளது. அதனுடைய அடிப்படையிலதான் ப்ரயோகங்கள் அமைஞ்சிருக்கு. போதாயன தர்ம சூத்ரம், போதாயன க்ருஹ்ய சூத்ரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்ரம், ஆபஸ்தம்ப க்ருஹ்ய சூத்ரம் என்று தனித்தனியாக இருக்கின்றன. க்ருஹ்ய சூத்ரத்துல கர்பாதானத்துலேருந்து ஆரம்பிச்சு கர்பாதானம், ஸீமந்தம், உபநயனம் போன்ற என்னென்ன க்ரியைகள் நாம அநுஷ்டானத்துல வச்சிண்டிருக்கமோ அவைகளை சொல்கிற சூத்ரங்கள் க்ருஹ்ய சூத்ரங்கள். ச்ரௌத சூத்ரம் அப்படிங்கறது யாகங்கள் எப்படி செய்யறது என்பதை சொல்லும்படியான சூத்ரங்கள். நாம் செய்யக்கூடிய க்ருஹஸ்த தர்மங்களுக்கெல்லாம் ஸ்மார்த்த கர்மா என்று பெயர். உபநயனம், விவாஹம் இத்யாதிகள் ப்ராஹ்மணர்கள் எல்லோரும் அவசியம் பண்ணிக்கவேண்டியதாக இருக்கிறது. அநுஷ்டானத்தை பார்த்தால் ச்ரௌத சூத்ரத்தைக் காட்டிலும் க்ருஹ்ய சூத்ரம் முக்யம் என்று தோன்றுகிறது. ஆனால் தர்ம சாஸ்த்ரகாரர்கள் யாகத்தைச் செய்யறதுக்கு தகுதியை ஸம்பாதிச்சுக்கறதுக்காகத்தான் உபநயனம், விவாஹம் முதலியவைகள் என்று சொல்லியிருக்றதனாலே யாகங்களைச் செய்ய சொல்லுகிற ச்ரௌத சூத்ரமும் முக்யமானதே. கடைசியாகச் சொன்ன சுல்ப சூத்ரத்திலே - யாக சாலைகள் எல்லாம் எப்படி அமைக்கணும், அக்நி குண்டங்கள் எப்படி அமைக்கணும் யாக பாத்ரங்கள் எல்லாம் எப்படி தயார் பண்ணனும் என்பதையெல்லாம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ரிஷிகள் இவ்வளவு பாடுபட்டு நமக்கு தர்மங்களைச் சொல்லியிருக்கிறார்கள். 3 வர்கத்தினர் த்விஜர்கள் ஆயினும், தற்போது ப்ராஹ்மணர்கள் மட்டுமே இதை அநுஷ்டிக்கிறார்கள். பிறப்பினாலே ப்ராஹ்மணன்னா பிறகு என்னத்துக்கு ஸம்ஸ்காரம்னா, தங்கம்தான் என்றாலும் ஸ்புடம்போட ஸ்புடம்போடத்தான் அதற்கு மெருகு ஏறும். அதுபோல ப்ராஹ்மணனுக்கு ஸம்ஸ்காரங்களை முறைப்படி பண்ண பண்ண ப்ரஹ்ம தேஜஸ் உண்டாகி அப்படியே வசிஷ்டரைப்போல ஜ்வலிப்பான். அதற்காக வேண்டிதான் ஸம்ஸ்காரங்கள்.
40 ஸம்ஸ்காரங்களாவன:
1.கர்பாதானம், 2.பும்ஸவனம், 3.ஸீமந்த்ம், 4.ஜாதகர்ம, 5.நாமகரணம், 6.அன்னப்ராசனம், 7.சௌளம், 8.உபநயனம், 9.ப்ராஜாபத்ய, சௌம்ய, ஆக்நேய, வைச்வதேவ என்று நான்கு வேத வ்ரதங்கள், 13.ஸமாவர்தனம், 14.விவாஹம், தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத ப்ரும்ம யஜ்ஞம் என்று பஞ்ச மஹா யஜ்ஞங்கள்
அஷ்டகா-அந்வஷ்டகா, பார்வணம், ஸ்தாலீபாகம், ஆக்ரஹாயணீ, ச்ராவணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என்று ஏழு பாக யஜ்ஞங்கள், அக்நி ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ச,பூர்ணமாசம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பசுபந்தம், ஸெளத்ராமணி என்று ஏழு ஹவிர் யஜ்ஞங்கள் அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்று 7 ஸோம ஸம்ஸ்தைகள் ஆக 40 ஸம்ஸ்காரங்கள் இதில் பாதி ஸ்மார்த்த கர்மா, பாதி யஜ்ஞங்களான ச்ரௌத கர்மா, இப்படி 40 ஸம்ஸ்காரங்களாலே ப்ராஹ்மணன் ஜ்வலிக்கிறான். எப்படி பாத்திரம் தேய்க்க தேய்க்க ஜ்வலிக்கிறதோ அதுமாதிரி இந்த ஸம்ஸ்காரங்கள் கர்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் இதெல்லாம் கர்பத்லேயே அவனுக்கு ப்ராஹ்மணத்துவத்த ஏற்படுத்தக்கூடிய ஸம்ஸ்காரங்கள். இதெல்லாம் செஞ்சா என்ன செய்யாத போனா என்ன என்று நினைக்கக் கூடாது. ஒரு ஸம்ஸ்காரத்த ஒருத்தன் செய்யலேன்னா அடுத்த ஸம்ஸ்காரத்துக்கு அவனுக்கு தகுதி கிடையாது.

ப்ராஹ்மணர்களுக்கு உரியதான ஸம்ஸ்காரங்களிலே ஜாதகர்ம, நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம் உபநயனம் என்கின்றவை மிகவும் முக்யமான ஸம்ஸ்காரம். இந்த ஸம்ஸ்காரங்களுக்கு முன்னாடி உதகசாந்தி பஞ்ச பாலிகை ப்ரதிசர பந்தம் என்கிற ரக்ஷh பந்தனம் நாந்தீ ச்ராத்தம் இவைகளைச் செய்து கொண்டுதான் இந்த ஸத்காரியங்களை நாம் ஆரம்பிக்கவேண்டும்.

இந்த உதகசாந்தி என்பதை ஏன் செய்யணும் என்று கேட்டால் ‘அபம்ருத்யு பரிஹாரார்தம் ஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் வேதோக்த ஆயு: அபிவ்ருத்யர்த்தம்“ என்று அதற்கு ஸங்கல்பம். அபம்ருத்யு என்பது அகால மரணம், காலத்தில் ம்ருத்யுவை எல்லோரும் ஏற்றுக்கொள்வோம் எதிர்பார்ப்போம், 80 வயசுக்கு மேல ஆயுடுத்து எமன் வந்து அழைச்சா போறத்துக்கும் தயார் என்றால் ஞாயம் அது, அபம்ருத்யு என்பது 25 வயசுல ஒரு பையன் போயிட்டான், ஆக்சிடெண்ட்ல போயிட்டான், யாரோ கொலை பண்ணி போயிட்டான், தற்கொலை பண்ணிண்டு போயிட்டான் என்கிற செய்தியெல்லாம் காதில் விழறது இல்லையா? அது பாபம் தானே? பூர்வ புண்ய பாபங்கள்தான் அப்படியெல்லாம் புத்தி குடுக்கறது. ‘சதாயு: புருஷ:” என்று வேதோக்தமான ஆயுசு ஒவ்வொருத்தருக்கும் 100 வயசு வேதத்துல சொல்லியிருக்கு, இருக்கறபடி ஒழுங்கா இருந்தா ஒரு வ்யாதியும் வராது 100 ஆயுசு இருந்துட முடியும். அகால ம்ருத்யுவை நீக்கத்தான் அபம்ருத்யு பரிஹாரார்த்தம் என்று ஸங்கல்பம். வாழ்க்கையில வரக்கூடியதான அவக்ரஹங்கள், ஆபத்துகள், துக்கங்கள், வ்யாதிகள், வ்யாஜங்கள் இவையெல்லாம் நிவ்ருத்தி ஆகணும் (இல்லாமல் ஒழியணும்) என்பதற்காகஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் என்றும், தர்மத்திற்கு விரோதமில்லாத அபீஷ்டங்கள் என்றால் ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறவேண்டும் என்று இந்த ஸங்கல்பங்கள் உதகசாந்தியில் உள்ளன.
அதற்குத் தேவையான மந்த்ரங்கள் இந்த உதகசாந்தி ஜபத்திலே இருக்கிறது. இதைச் சொன்னவர் போதாயன ருஷி. அதனால்தான் யார் பண்ணினாலும் போதாயன உக்த ப்ரகாரேண அப்டீன்னு சொல்லித்தான் பண்ணுவா. இதெல்லாம் பூர்வாங்கமான க்ரியைகள்.
ஜாதகர்மம்
ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம் இதைப் பொதுவாக ஜாதகாதி என்று சொல்லுவார்கள். இந்த ஜாதகர்மம் முதலியவைகள் தனித் தனியாகச் செய்யவேண்டிய க்ரியைகள்தான். இப்போது அநேகமாக சேர்த்துச் செய்யறோம். லோக தர்மம். தனித்தனியாச் செய்யறதுக்கு வசதியில்லாதவர்கள் சேர்த்துச் செய்கிறார்கள். இப்படிச் செய்வதற்கு ஸமான தந்த்ரம் அப்டின்னு பெயர். கர்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம், வ்ரதம், ஜாதகர்மம் முதலியவற்றையும் ஸமான தந்த்ரமாகத்தான் செய்கிறார்கள். அப்படிப் பண்ணும்பொழுது காலாதீதம் ஏற்படும் அதாவது உரிய காலத்தில் பண்ணவில்லை என்கிற குற்றம் ஏற்படும். அதற்காக காலாதீத ப்ராயச்சித்தமும் மற்றும் எல்லாத்தையும் சேர்த்துச் செய்வதற்கான ப்ராயச்சித்தமும் செய்துவிட்டு மேலே கர்மாவைச் செய்யணும். ஆக கர்மாவை விடக்கூடாது. ஜாதகர்மா என்பது பிறந்த குழந்தைக்கு செய்யவேண்டியதான வைதீகமான ஸம்ஸ்காரம். ஸத் ப்ராஹ்மணனுக்கு உரியதான ஸம்ஸ்காரங்களிலே ஜாதகர்மம் முதலாவது. பத்து மாசம் கற்பத்தில் இருந்து குழந்தை பிறக்கும்போதே வேதம், கர்பத்தில் இருக்கும்போதும் வேதம், இதுதான் ப்ராஹ்மணனுக்கு உள்ள ஒரு பெருமை, பிறந்தவுடன் அந்தக் குழந்தையை முதன் முதலில் தகப்பன் பார்க்கும்போது வைதீகனான தகப்பன் வேதத்தைச் சொல்லிக்கொண்டே அந்தக் குழந்தையைப் பார்க்கணும் அப்படின்னு விதிக்கிறார்கள் ரிஷிகள். அதிலே ஆபஸ்தம்பர் ‘திவஸ்பரி ப்ரதமம் ஜஜ்ஞே ... “ அப்படிங்கற அநுவாகத்தைச் சொல்லிக்கொண்டு அந்தக் குழந்தையைப் பார்க்கணும் என்கிறார். போதாயன ருஷி புருஷ ஸ_க்தம் உத்ராநுவாகத்தைச் ‘அத்ப்யஸ்தம் பூதப்ருத்வியை ரசாஸ்சா ...” இந்த அநுவாகம் பூரா சொல்லிக்கொண்டு அந்தக் குழந்தையைப் பார்க்கணும் ப்ரதம தரிசனம் பண்ணனும் என்கிறார். புருஷஸ_க்தம் உத்தரானுவாகத்தைச் சொல்லுவானேன் என்னு கேட்டா, உலகத்திலேயே முதன் முதல்ல பிறந்த ஒரு குழந்தை விராட் புருஷன் பகவான் சாக்ஷhத் வைகுண்டபதியோட அவதாரம் விராட் புருஷ அவதாரம், விராட் புருஷனை முதன் முதல்ல யார் பார்கறா, வேத ஸ்வரூபனான ப்ரஹ்மா பார்க்கிறார். “ஞா ஹோதி ... “ என்று பாகவதத்தில் பெரிய ஸ்தோத்ரம், அந்த ஸ்தோத்ரத்தை சொல்லிக்கொண்டே பார்கிறார் அந்த பகவானை. விராட் புருஷனான விஷ்ணுவினுடைய அம்சமான அந்த குழந்தையைப் பார்க்க காரணம் என்னவென்றால் அநந்த பத்மநாப தரிசனம். பிறந்த குழந்தைக்கு நாபி நாளம் இன்னமும் சேதிக்கவில்லை (நறுக்கப்படவில்லை). நாபி நாளத்தோட இருக்கக்கூடிய இந்த குழந்தை, அதற்கு காரணோதகமான கர்பத்திலே உள்ள நீரோட பிறந்திருக்கு. ப்ரதம புருஷனான நாராயணனுக்கு “ஆபோ நாரா இதி ப்ரோக்தா: ..” என்றபடி காரணோதகத்தின் மத்தியேலே நாபி நாளத்தோட தோன்றினாரோ அதனுடைய அம்சமே இங்கே இருக்கிறதனாலே இந்த சிசுவைப் பார்க்கும்போது அநந்த பத்மநாபனாகவே பாரு, என்கிறார். சிசுவுக்கு பிறகு தோஷ பரிஹாரார்த்தமாக ‘Nக்ஷத்ரியைத்வா ... “ என்கின்ற மந்திரம் சொல்லப்படுகிறது. இந்த மந்திரம் வருண பாசத்திலிருந்து குழந்தையை விடுவிக்கிறது என்றும், Nக்ஷத்ரத்திலே உள்ள தோஷத்திலிருந்து அந்த குழந்தையை நீக்கறது என்பதும், தோஷ பரிஹாரார்த்தம் இந்த ருக் சொல்லப்படுகிறது. இதையும் சொல்லிக்கொண்டு இந்த குழந்தையை அபிமந்திரிக்கணும். அபிமந்திரிக்கறது என்பது தகப்பனார் அந்த குழந்தையை பார்ப்பதுதான். ‘Nக்ஷத்ரியைத்வா ..... யூயம் பாதஸ்ஸ்வஸ்திபிஸ் சதாந:” இந்த சூக்தம் குழந்தைகளுக்கு கணைங்கிற ஒரு வ்யாதி வரும், அதுவே பிற்காலத்தில் முற்றி வலிப்பு என்கிற வ்யாதியா மாறிடும். இளம்பிள்ளை வாதமாயிடும், குழந்தைக்கு கை கால் பிடிச்சு இழுத்துடும். இந்த வ்யாதிகள் வராமல் இருப்பதற்காக இந்த சூக்தம். வ்யாதிகளெல்லாம் கர்பத்திலிருந்தே தொடங்கறதனாலே, கர்பத்தில உள்ள ஒரு நீர் நரம்புலே போய் அடைச்சுண்டுடுத்தானா, அந்த நரம்புல உள்ள தோஷத்துனால இந்த வ்யாதி வரும், அதற்கு வருண பாசம் என்று பெயர். நீர்தானே வருணன். பொதுவாக எல்லா நீரிலும் ‘வைத்யுதம்” என்ற மின்சாரம் கலந்தே இருக்கிறது. அதனால்தான் இந்த வ்யாதிகள் வறது. அதனால் அதற்குறிய தேவதைகளை ப்ரார்திச்சு இந்த வ்யாதிகள் வராமல் நீங்கணும் என்று இந்த சூக்தத்தை ஜபிக்கச் சொல்லிருக்கு. கர்ப வாசத்தால வந்த துக்கம் Nக்ஷத்ரியைத்வா என்பதால் சொல்லப்படுகிறது. கர்ப வாசத்தால என்ன ஒரு துக்கம் வந்ததோ, நரம்பு வ்யாதியினாலே வருண பாசத்தினால் என்ன ஒரு வ்யாதி வந்ததோ அதெல்லாம் நீங்கும்படி ப்ரார்த்தனை. ‘சிவேதே த்யாவா ப்ருத்வீ உபே இமே” - ஆகாசம், பூமி எல்லாம் உனக்கு நல்லதாக இருக்கட்டும். ஆகாசம், பூமியில் உள்ள அட்மாஸ்பியர், கிளைமேட் கெட்டுப்போனால் குழந்தைக்கு உடல்நலம் கெட்டுப்போகும். எந்தெந்த செடிகள், தாவரங்களில் பட்ட காற்று குழந்தையின்மேல் பட்டால் கெடுதலை ஏற்படுத்தலாம் அதனால் ‘ஸ ஓஷதீபி:” என்பதால் ஓஷதிகள் (தாவரங்கள்) உனக்கு நன்மை அளிப்பவையாக இருக்கட்டும், காற்று உனக்கு நல்லதாக இருக்கட்டும். நான்கு திக்குகளும் உனக்கு நன்மை புரிவதாக இருக்கட்டும். சூரியனால் உனக்கு நன்மை உண்டாகட்டும். ரNக்ஷh கணங்களுக்கெல்லாம் நிருருதி என்கிற தேவதை உனக்கு அநுகூலமாக இருக்கட்டும். உனக்கு சிரங்கு போன்ற வ்யாதிகள் வராமல் இருக்கட்டடும். இரவும் பகலும் உனக்கு Nக்ஷமமே உண்டாகட்டும். சூரியனிடத்தில் க்ரஹணங்கள் நீங்குவது போல உனக்கு ஏற்பட்டிருக்கிற வ்யாதிகள் நீங்கட்டும். குற்றமில்லாதபடி எல்லா தேவர்களும் உன்னைக் காப்பாற்றட்டும். முக்கியமாக ஹே ப்ருஹஸ்பதே இந்த குழுந்தையைக் காப்பாற்று. இந்த்ரன் இந்த குழந்தையை காப்பாற்றட்டும். ‘யூயம் பாதஸ் ஸ்வஸ்திபிஸ் ஸதாந:” எல்லா தெய்வங்களும் எப்பொழுதும் எங்களைக் காப்பாற்றட்டும். என்று அந்தக் குழந்தையை அபிமந்திரித்து அந்தக் குழந்தையை அம்மா மடியில் உட்கார வைக்கணும். அப்போது ‘அங்காதங்காத் ஸம்பவஸி ஹ்ருதயாத் அதிஜாயஸே ... ஆத்மாவை புத்ர நாமாஸி ஸஜீவ சரதஸ்சதம்” நு}றாண்டு இந்த புத்ரன் Nக்ஷமமாக இருக்கணும். விராட் புருஷனிடமிருந்துதான் எல்லாமே தோன்றிற்று. அதுபோல் அப்பாவிடமிருந்து குழந்தைக்கு எல்லாம் அப்படியே வருகிறது, அப்பாவினுடைய கண், காது, மூக்கு என்று அப்பா அம்மாவினுடைய ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் இந்த சிசுவினிடம் வருகிறது என்பதை வேதம் ‘அங்காது அங்காது” என்று ஸ்பஷ்டமாகச் சொல்கிறது. அதனால்தான் பெரும்பாலான குழந்தை சாயலிலும் அப்பாவைப்போல் இருக்கும், குரலும் அப்பாவைப்போல் இருக்கும், கையெழுத்து அப்பாவைப்போல் இருக்கும், குணமும் அப்பாவைப்போல் இருக்க காரணம். அதனால்தான் நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஜாதி தர்மத்தைக் காப்பாற்றிக்கொண்டு வந்தார்கள். மஹா ஜ்ஞாநியாக ஒருவர் இருந்தார் என்றால் அதே பரம்பரையைக் காப்பாற்றிக்கொண்டே வந்தால் அந்த வம்சத்துக் குழந்தைகள் எல்லாம் மஹா ஜ்ஞானியாகவே இருப்பார்கள் அல்லவா? ஒரு மூடமும் ஒரு நல்லதும் கலந்துவிட்டால் மூடமாக பிறந்விடலாம் அல்லவா? ‘ஆத்மாவை புத்ர நாமாஸி” தகப்பனேதான் புள்ளையாக பிறக்கிறான். நு}று வருஷம் நன்னா இரு என்று அந்தக் குழந்தையை ஆசீர்;வாதம் பண்ணி எப்படி இருக்கணும்னா ‘அஸ்மா பவ” கல்லு மாதிரி இரு. ‘பரசுர் பவ” பரசு என்ற ஆயுதம்போல் கூர்மாயாயும், திண்மையாயும் இரு. ‘ஹிரண்ய அஸ்த்ருதம் பவ” - கட்டித் தங்கமாட்டம் இரு. ‘பசூநாந்த்வா ஹ{ங்காரேணா அபிஜிக்ராமி” ஒரு பசுமாடு தான் ஈன்ற கன்றை ஆர்வத்துடன் ஒரு ஹ{ங்காரம் பண்ணி முகர்ந்து பார்ப்பதுபோலே அந்தத் தாய் அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவேண்டும். இப்போ இந்தக் குழந்தைக்கு பெயர் இல்லாததால் அந்தக் குழந்தையின் நக்ஷத்திரத்தைச் சொல்லி கூப்பிடவேண்டும். அதுதான் அந்த குழந்தைக்கு மங்களா சாசனம், ஆசீர்வாதம்.
‘அக்நிராயுஷ்மாந் தேநத்வாயுஷாயுஷ்மந்தங் கரோமி” - அக்நி ஆயுஷ்மாநாக இருக்கும், ஏனென்றால் கல்யாணத்தன்று மூட்டப்படும் அக்நி கடைசீ காலம்வரை ஒளபாஸனம் பண்ணி காப்பாற்றப்படவேண்டும் என்பது சாஸ்த்ரம். அதற்கு உதவியாக இருப்பது ‘வனஸ்பதிபி:” என்று ஸமித்து அந்த அக்நிபோல் நீ ஆயுஷ்மானாக இரு. ஸோம யாகம் பண்ணுவதற்கு ஸோம ரசம் தேவை, ஸோம ரசத்தை தரவல்ல ஸோம லதைகள் (கொடிகள்) போன்ற ஓஷதிகளாலே அந்த ஸோம ரசம் ஆயுஷ்மானாக இருக்கிறது அதுபோல் நீயும் ஆயுஷ்மானாக இரு. ‘யஜ்ஞ ஆயுஷ்மாந ஸதக்ஷpணாபி:” யஜ்ஞம் ஆயுஷ்மாநாக இருப்பது தக்ஷpணைகள் தாராளமாக வழங்கப்பட்டு வருவதால், அதுபோல் நீயும் ஆயுஷ்மாநாக இரு. ‘ப்ரஹ்மாயுஷ்மத் தத் ப்ராஹ்மணை:” - வேதத்தை அத்யயனம் பண்ணுகின்ற ப்ராஹ்மணர்களாலே வேதம் ஆயுஷ்மாநாக இருக்கிறது, அதுபோல் நீயும் ஆயுஷ்மாநாக இரு. “தேவா ஆயுஷ்மந்த தே அம்ருதே” தேவர்கள் அழிவதில்லை காரணம் அம்ருதத்தினால் - அதுபோல் நீயும் அழியாமல் இரு. ‘ப்ராணோ ரக்ஷதி விச்வமேதது ...” என்ற அநுவாகத்தைச் சொல்லி முலைப்பாலுடன் தேன் கலந்து நாக்கில் தடவி அது சப்புக்கொட்டுகிறதா எல்லா இந்திரியங்களும் வேலை செய்கிறதா என்று பார்க்கவேண்டும். இந்த அநுவாகம் பூராவுமே ப்ராணனில் ஆரம்பித்து எல்லா இந்திரியங்களையும்பற்றி கூறுகிறது. அக்நிபோல் ப்ரஹ்மதேஜஸ்ஸ{டன் இரு ஆனால் அம்மாவை சுட்டுவிடாதே. அதற்காக காந்தி குறைந்து விடாமல் சுக்ரனைப்போல் ஜோதிர்மயமாக இரு என்றும் வேதம் குழந்தையை ஆசீர்வதிக்கிறது. மேலும் தாய்ப்பால் முதன் முதலில் புகட்டுவதற்கும் வேத மந்திரம் உள்ளது அதில் இந்த குழந்தைக்கு சாக்ஷhத் ஸரஸ்வதி தேவியே வந்து தன் மார்பில் பால் கொடுக்கட்டும் என்று கேட்டுக்கொள்கிறது. குழந்தைக்கு பால் கொடுக்கிற அம்மாதான் ஸரஸ்வதி, அம்மாதான் லக்ஷ;மி அம்மாதான் ஸர்வ தெய்வமும். பால் சாப்பிட்டானதும் குழந்தைக்கு கவசம் - பாதுகாப்புக்காக மந்த்ரம் ‘த்யௌஸ்தே ப்ருஷ்டகும் ரக்ஷது வாயுரூரு ... ஸவிதாபிரக்ஷது. ஆவாஸஸ பரிதானாத் ப்ருஹஸ்பதிர் விச்வேதேவா: அபிரக்ஷந்து பச்சாத்” - த்யெ: தே ப்ருஷ்டகும் ரக்ஷது - உன்னுடைய முதுகை ஆகாச தேவன் காப்பாற்றட்டும். உன்னுடைய துடைகளை வாயு தேவனும் அச்விநி தேவர்களும் காப்பாற்றட்டும். ஸ்தநம் தயந்தம் ஸவிதா அபிரக்ஷது - பால் குடிக்கும்போதே ஸவிதா என்கிற சூர்யன் உன்னைக் காப்பாற்றட்டும். இப்போ குழந்தை துணி எதுவும் கட்டிக்காதில்லையா - ‘ஆவாஸஸ பரிதானாத் ப்ருஹஸ்பதி:” - நீ துணி கட்டிக்கொள்கிற நாள் வருகிற வரை ப்ருஹஸ்பதி உன்னைக் காப்பாற்றட்டும். ‘விச்வே தேவா அபிரக்ஷந்து பச்சாத்” - முன்னாடியும் பின்னாடியும் விச்வே தேவர்கள் இருந்து காப்பாற்றட்டும். அது பூர்ணமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கும்பத்தில் மாவிலைக்கொத்து தேங்காய் புஷ்பத்துடன் அதன் சிரசில் வைத்து ‘ஆப: சுப்தேஷ{ ஜாக்ரத ரக்ஷhகும்ஸி நிரிதோநுதத்வம்” என்று சொல்லி வைக்கவேண்டும்.
அடுத்ததாக அந்தக் குழந்தைக்கு பால்ய ம்ருத்யு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு ஹோமம். போதாயன சூத்ரத்தில் ம்ருத்யுவைக் குறித்தே பண்ணப்படுகிறது. ஆபஸ்தம்பர் கூறுவது: ‘அயசண்டோ மர்க: உபவீரோ உலு}கல: ... “ சண்டன் மர்கன் எல்லாரும் அசுரர்கள். பாகவதத்தில் வரும் அதே சண்ட மர்கர்கள், சுக்ராச்சாரியாருடைய பிள்ளைகள். உபவீரன், உலு}கலன் என்பவர்கள் குழந்தையிடம் வராமல் இருக்கவேண்டும். உலு}கலம் என்பது உரல் அதுவும் ஒரு அசுரனே என்று ஆழ்வார் சொல்லுகிறார்.
‘மிச்ரவாசஸ: கௌபேரகா: ரNக்ஷhராஜேந ...... அபரிதா க்ருதாந் “
குபேரனுடைய பிள்ளைகள் யக்ஷர்கள், ராக்ஷஸனால் ப்ரேஷிக்கப்பட்டு கைலி கட்டிக்கொண்டு வருவார்களாம். பூதனா, போடகா, ரேவதீ, ஜ்யேஷ்டா இவையெல்லாம் குழந்தைகளுக்கென்று வரக்கூடிய சில பால க்ரஹங்கள், கணங்கள். ‘நிசீதசாரிணீ .... க்ருஷ்ணவர்த்மநே“ குழந்தை து}ங்கிக்கொண்டிருக்கும்போதே மிரட்டுவர், இதனால்தான் குழந்தை து}ங்கிக்கொண்டிருக்கும்போதே து}க்கிப்போடும். அப்படிப்பட்ட பூதங்கள், க்ஷ{த்ர Nதுவதைகள் விலகணும் என்பதற்காக இந்த ஹோமங்கள் பண்ணப்படுகிறது.

நாமகரணம் குழந்தைக்கு பெயர் சூட்டுதல்.
தற்போது 11ம் நாள் புண்யாஹ வாசனத்தின்போது செய்யப்படுகிறது. ஆண் குழந்தையானால் இரட்டைப்படையிலும், பெண் குழந்தையானால் ஒற்றைப்படையிலும் பெயர் வைக்கவேண்டும். பெண் குழந்தைக்கு தீர்க்கமாக சீதா, யசோதா, லாவண்யா போல வைக்கவேண்டும். ஒற்றைப்படை இரட்டைப்படையில் பெயர்களை மாற்றிக்கொள்ள ஸ்ரீ என்ற எழுத்தை முன்னால் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது பகவானுடைய பெயரை வைக்கணும். அதற்காக கன்னாபின்னாவென்று பெயர் வைக்கக்கூடாது த்வாதச நாமங்கள்ள ஒண்ணைத்தான் வைக்கணும், கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்று இவைகள்ள ஒண்ணை அவசியம் வைக்கணும். இதை பெரியாழ்வார் சொல்றார்....
மலமுடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலமுடை ஊத்தையின் பெயரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்றழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
குழந்தைக்கு க்ருஷ்ணா, கோவிந்தா என்று பெயர் வைச்சுட்டு க்ருஷ்ணா கோவிந்தான்னு கூப்பிட்டா நீ யசோதையா போயிடுவே உனக்கு ஏது நரகம்? என்கிறார்;. மேலும் பெரியாழ்வாரே
‘நம்பி, பிம்பியென்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுகிப்போகும்“
என்று கன்னாபின்னாவென்று நாட்டு மானிடர்களின் பெயர்களையும் அர்த்தமற்ற அல்லது அபார்த்தம் வரக்கூடிய வார்த்தைகளைக்கொண்ட பெயர்களை வைக்காதீர்கள் என்கிறார்.
அடுத்து அன்ன ப்ராசனம்.
ததோன்னப்ராசனம் ஷஷ்டே மாஸி பூர்வேத்யுநேபி:ன்னு சொல்றார். அன்னப்ராசனமானது 6ம் மாஸத்தில் பண்ணனும்னு விதி, அது பகலில் பண்ண வேண்டும் சாயந்திரத்தில் பண்ணக்கூடாது. இதற்கு காயத்ரியா சரு ஹோமம், அந்ந சூக்தம் ‘அஹமஸ்மி ப்ரதமஜா ருதஸ்ய” என்ற மந்திரத்தினால் அந்ந ஹோமம் சொல்லப்பட்டுள்ளது போதாயன சூத்திரத்தில். ஓஷதி சூக்தத்தினால் ப்ராசனம் ‘யா ஜாதா ஓஷதயோ ...” என்ற மந்திரம் சொல்லி ப்ராசனம் பண்ணிவைக்கவேண்டும். நாமெல்லாம் ‘கோவிந்த கோவிந்தா கோவிந்தா” என்று சொல்லி ஊட்டிவிடுகிறோம். பிறந்த குழந்தைக்கு முதன் முதல்லசாதம் ஊட்டணும்னா அதற்கப்புறம் அது ஆரோக்யமா இருக்கணுமே. ஆபஸ்தம்பர் வ்யாஹ்ருதியினாலேயே சொல்லியிருக்கிறார் அன்னப்ராசனத்தை. ‘அபாந்த ஓஷதீநாகும் ரசம் ப்ராசயாமி தாஸ்த ஆப ஓஷதயஸந்து அநமீவாஸ்தே ஆப ஓஷதயஸந்து” என்று அதன் வாயில் சாதத்தை ஊட்டவேண்டும். ஏன்னா எல்லா தீர்த்தமும் உனக்கு உடம்புக்கு நல்லதாகட்டும், உனக்கு எல்லா கீரையும் உடம்புக்காகட்டும், கறிகாயெல்லாம் உனக்கு உடம்புகாகட்டும், உனக்கு மம்மு உடம்புக்காகட்டும்” என்று சொல்லி அந்த சாதத்தை ஊட்டணுமாம் அந்த குழந்தைக்கு. இதற்கு ‘பூ:, புவ:, ஸ{வ:, பூர்புவஸ்ஸ{வ:” என்ற 4 வ்யாஹ்ருதியுடன் 4 தரம் இந்த ருக்கைச் சொல்லி குழந்தைக்குச் சாதத்தை ஊட்டணும் என்று சொல்கிறார்.
சௌளம்
சூடா என்றால் சிகா என்று அர்த்தம். சிகை விஷயமான கர்மாவாக இருப்பதானால் இதற்கு சௌளம் என்று பெயர். ‘ளடையோரபேத:” ள ட ரெண்டும் அபேதம் சூடா அப்படிங்கறது, சூளான்னு ஆயிடும். சூளா விலிருந்து சௌளம் என்றாயிற்று. இந்த சௌளம் பண்ணவேண்டிய காலத்தைச் சொல்றார் ‘த்வாதசே மாஸி த்ரையப்தே வா, பஞ்சமாப்தேதிவா பவேத்” என்று சொன்னார். 12 மாஸத்தில் குழந்தைகளுக்கெல்லாம் முடியிறக்கறா. ஒரு வயசுக்குள்ள முடியிறக்கணும் இல்லேன்னா 3 வயசுக்கு மேலே அல்லது 5 வயசுக்கு மேலேன்னு ஒரு க்ரமம் வச்சிண்டிருக்கோம் இல்லையா அது சௌளம்தான். கோவில்ல போய் முடியிறக்கறதும் சௌளம்தான். க்ரமப்படி பண்ணவேண்டிய சௌளம்தான் அப்படி ஆயிடுத்து. அதைக்கூட பெரியாழ்வார் பாடறார்.
‘பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனிவித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்கக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்கக்காய்.”
கேசம் மிகவும் முக்கியம். பௌத்தர்கள், ம்லேச்சர்கள் எல்லாம் கேசம் வச்சுக்றதில்லை. நாம் குளிச்சோமானால் கேசத்திலிருந்து விழற தீர்த்தம் இருக்கே அதற்கு சில பித்ருக்கள் காத்திண்டிருக்காளாம். எவ்வளவோ பித்ருக்கள் இருக்கா. முக்கிய பித்ருக்களுக்கெல்லாம் அமாவாசை இத்யாதிகள்ல தர்பணம் பண்ணிடறோம். அநாதையா போயிட்ட பித்ருக்கள் நம்ம குடும்பத்துல எத்தனைபேர் இருக்கலாம். நம்ம குலத்தில பிறந்த குழந்தையாச்சே இவன் வேஷ்டியைப் பிழிய மாட்டானா என்று பார்த்துண்டிருக்கா. அதனாலதான் நாம்ப கைலி மாதிரி புணைஞ்ச துணிய கட்டிக்க கூடாது. நுனி இருக்கணும் வேஷ்டியில, அப்பதான் அதுவழியா விழற ஜலம் பித்ருக்களுக்கு போகும். இதற்கு வஸ்த்ர நிஷ்பீடணம் என்று நித்ய கர்மாவுலேயே அங்கமாச் சாஸ்த்ரத்திலே சொல்லியிருக்கு. ப்ரஹ்மாதி தேவர்கள் கூட கேசத்தோட இருக்கிறார்கள். ப்ரஹ்மா உட்பட அனைத்து தேவதைகள், ருஷிகள் எல்லாரும் சிகையுடனும், உபவீதத்துடனும்தான் எல்லா யஜ்ஞங்களையும் பண்ணினார்கள் என்று வேதம் சொல்றது. சிகை இல்லாதவன், உபவீதம் இல்லாதவன், கச்சம் இல்லாதவன், ஊர்த்வ புண்ட்ரம் இல்லாதவன் எதைப் பண்ணினாலும் வ்யர்த்தம் அப்டீன்னு ஸ்ம்ருதி சொல்றது. இவை இல்லாதவன் எத்த பண்ணினாதான் என்ன? எத்தப் பண்ணியும் ப்ரயோஜனம் இல்லை. அதனால் கேசம் முக்கியம் என்பதை ‘யே கேசிந: ப்ரதமா சத்ரமாசதே, யேதிராவ்ருதம் ...” என்று வேதம்.
சௌத்திற்கு ஹோமம் இருக்கு. ஆபஸ்தம்பர் ‘தாதா ததாதுநோ ரயிமீசாநோ ஜகதஸ்பதி:” ... தாதா - ஸர்வேச்வரன் - ந: - எங்களுக்கு, ரயிம் ததாது |ஐச்வர்யத்தைக் கொடுக்கட்டும். ஈசாநோ ஜகதஸ்பதி: - உலகத்துக்கே படியளக்கறவன் ஈச்வரன், ஸந: பூர்ணேன வாவந: - ஒரு குறையும் இல்லாமல், இந்த கர்பமும் குறைந்தது என்றில்லாமல் பூர்ணமாக வைச்சு காப்பாத்து, தாதா ப்ரஜாயா உத ராய ஈசே - உலகத்தையெல்லாம் படைத்தவன், ஏதம் விச்வம் புவநம் ஜஜாநா - உலகத்தில் எல்லாரையும் படைக்கிறவன் எங்காத்துக்கும் ஒரு குழந்தையை படைக்கிறான், தாதா புத்ரம் யஜமாநாய தாதா - புத்ரனை அருளிச்செய்த அந்த ஸர்வேச்வரனுக்கு இந்த ஹவ்யத்தை நெய்யோடு சேர்த்து ஸமர்ப்பிக்கிறேன். மனிதர்கள் கொடுப்பதை சாப்பிடுவதால்தான் தேவதைகள் பிழைக்கிறார்கள் என்பதில்லை, முறைப்படி தன்னை ஆராதிக்கிறானா என்பதை நோக்குகிறார்கள். தாதான்ற ஈச்வரன் புராதனமான வாழ்க்கையை எங்க தாத்தா தாத்தா தாத்தால்லாம் எப்படி இருந்தாளோ வயோ வ்ருத்தாளாக, ஞான வ்ருத்தாளாக, தர்ம வ்ருத்தாளாக இருந்தாளோ அப்படிப்பட்ட குறையாத ஒரு வாழ்க்கைளை எங்களுக்கு குடுக்கட்டும். வயம் தேவஸ்ய தீமஹி ஸத்யராதஸ: - எங்களைக் காப்பற்றட்டும் என்று நான் கேட்டதனால நடந்துடாது, ஸத்யத்தைக் காப்பாற்க்கூடிய ஸத்ய சங்கல்பனான அவன் நாங்கள் காப்பாற்றப்படட்டும் என்று ஒரு தரம் நினைத்தானானால் நாங்கள் Nக்ஷமமாக இருப்போம். எனக்கு இதைக் கொடு என்று கேட்காதபடி எனக்குத் தேவையானதை அவனே கொடுப்பான், நல்ல புஷ்டியான குழந்தையை அவனே கொடுப்பான், இஹ லோகத்திலேயே சாவில்லாத அமரர்களைப்போல எங்களைச் சௌக்யமாக வைத்திருப்பான். விச்வேதேவா: அதிதி: ஸஜோஷா: - சாகவே சாகாதவர்களான விச்வேதேவர்கள் எங்களுக்கும் அம்ருதத்தைக் கொடுக்கட்டும். தேவர்களுக்கெல்லாம் தாயாரான அதிதியும் எங்களுக்கு Nக்ஷமத்தை உண்டாக்கட்டும். யஸ்மை துவகும் -- ஜாதவேதஸ் என்கிற அக்நி தேவனை நல்ல முறையில் துதிக்கிற எனக்கு அவர் சௌக்கியமான லோகத்தைக் கொடுக்கிறார் இதனால் நாங்கள் அச்வம், புத்ரர்கள், பௌத்ரர்கள், பசுக்கள் முதலான ஸகல மங்களகரமான ஸம்பத்துக்களை அடைகிறோம். த்வே ஸ{புத்ரசவஸ: - பலமுள்ள சவஸ் என்ற தேவனின் புத்ரனான அக்நி தேவன் எங்கள் இஷ்ட காம்யங்களைப் பூர்த்திசெய்யும் சக்தி நிறைந்தவன். இந்த்ராதி தேவர்கள்கூட அக்நியைக் காட்டிலும் அதிகமான நன்மைகளைச் செய்துவிடமுடியாது. ஆகவே அப்படிப்பட்ட அக்நி தேவதனை துதித்து வழங்கப்படும் இந்த ஹோமங்களுக்குப் பலனாக எங்கள் இஷ்ட காம்யங்களை அக்நிதேவன் பூர்த்திசெய்யட்டும். உக்த உக்தே - சஸ்த்ர யாகங்களின் முடிவில் இந்த்ரனைத் துதித்து ஸோமரஸத்தைப் பிழிந்து ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தின் முடிவிலும் இந்த்ரனைத் துதித்து வழங்கப்படும் இந்த ஆஹ{தியினால் இந்த்ரன் த்ருப்தனாகி புத்ரனின் கோரிக்கையை பிதா நிறைவேற்றி வைப்பதுபோல் எங்கள் கோரிக்கைகளை இந்த்ரன் நிறைவேற்றி வைக்கட்டும். பின்னர் அந்தக் குழந்தையை உட்கார வைத்து சௌளம் பண்ணவேண்டும். ‘யேநாவவது ஸவிதா க்ஷ{ரேணா” - எந்தக் கத்தியினால் சூர்யதேவன் ஸோமனுக்கு வபனம் பண்ணினானோ, ப்ரஹ்மலோக வாஸிகளான ருஷிகள் எல்லாம் எந்தக் கத்தியினாலே வபனம் பண்ணினாளோ அந்தக் கத்தியினாலே உனக்கு நான் வபனம் பண்றேன்.
‘தேந ப்ரஹ்மாணோ வபதேதம்” - நல்ல ப்ரகாசமாக இருக்கிறது உன்னுடைய .{லுயேழயெ எயயலயயழஇ {னமழஒயெழihஇ யுனைவைய:இ மழஒளுயயயெஷஇ எயியவயர|
வாயுதேவனே நீ உஷ்ண ஜலரூபத்திலும், அதிதி க்ஷவர கார்யத்திலும் அநுக்ரஹம் செய்யவேண்டும்.
யுயிய:இ {னெவெயரஇ தயஐஎயளயழஇ னஐபுயய_லயரவஎயயலயஇ எயஉய_ளயழ| தலயயழறுஉயஇ ளயருலய_ஆ னசுளுயழ||
இந்த ஜலம் இவனுக்கு நீண்ட ஆயுள், அதுவரை தீக்ஷpண்யமான கண்பார்வை, தேஜஸ் முதலியவை அநுக்ரஹிக்கட்டும்.
லயழயெயஎயியவயஷஇ ளயiஎயவயயஇ ஓயரசழயேஇ ளயயழஅயளலயஇ சயரூய:இ எயசஸயேளலயஇ iஎயÓயயெஷ| வயழயெ டியஹர்அயயயே:இ எயியவயழனஆஇ யுளலயயலயரலுஅயயயெஷஇ தயசனiலுவு:இ லயஙயயசூளயவயஷஇ யுலயஆ .... ளுயஅயய_|
ஸ_ர்யனுடைய கத்தியினால் ஸோமனும், வருணனும் மிகுந்த Nக்ஷமத்தை அடைந்தனர். அதுபோல் இந்த கத்தியால் ... இந்தக் குமாரன் ஜீர்ணசக்தியுடன் ஆயுளுடன் விளங்கவேண்டும் என்ற ப்ரார்தனை பலிதமாகும் என்று ஸபையிலுள்ள ப்ராஹ்மணர்கள் அநுக்ரஹிக்வேண்டும்.
லயவஓயரசழயேஇ அயஉய_லயவயயஇ ளயரியழளுயளயயஇ எயிக்ஷயயஇ எயியளையஇ மழஒளுயயயெஷ| ளுயரiஞெய iளுயச:இ அயயளலயயலயர:இ pயஹஅயயழலுயஐ:|
நாபிதனே, தீக்ஷண்யமான, பளபளப்பான இந்தக் கத்தியால் இவனுக்கு ரோகம் ஏதும் வாராதபடி வபனம் செய்வாயாக.
லயழnயியருலுயயஇ டியசுhளியவயழ:இ யுபயெழ:இ ஜனெஹளலயஉயஇ யுயலயரலுயழ யுஎயியவயஷ| வயழயெஇ யுளலயயலயரலுயழஇ எயியஇ ளயயழுளுடயயழறுலயயலயஇ ளஎயளவயலயழ|
எந்தக் கத்தியால் வபனம் செய்ததால் பூஷா, அக்நி, இந்த்ரன் ஆகிய தேவர்களும் ஆயுள், கீர்த்தி, Nக்ஷமத்தை அடைந்தனரோ அந்தக் கத்தியின் அருள் இந்தக் கத்தியிலும் உண்டாகி இந்தக் குமாரனுக்கும் ஏற்பட அந்தராத்மாவை வேண்டுகிறேன்.
லயழயெஇ டீயருலய:இ உயசயவையஇ யுலயஆஇ தலயயழறுஉயஇ pயளுலயயவையஇ ளயருலய_அயஷ| வயழயெஇ யுளலயயலயரலுயழஇ எயியஇ ளயயழுளுடயயழறுலயயலயஇ ளஎயளவயலயழ|
வெறுங்கண்ணால் ஸ_ர்யனை தரிசிக்கும் அளவுக்கு கண்சக்தியுடனும் தீர்காயுள், கீர்த்தியுடன் விளங்கட்டும்.
லயழயெஇ pயருலுயயஇ டியசுhளியவயழ:இ யுபயெழ:இ ஜனெஹளலயஉயஇ யுயலயரலுயழஇ யுஎயியவயஷ| வயழயெவயழஇ எயியயiஅயஇ .... ளுயஅய_யெஷஇ யுயலயரலுயயஇ எயஉய_ளயயஇ லயஙயயதலயயழமஷஒஇ ளயரஅயயெய:இ யுளயய:|
... ஹே குமாரனே ப்ருஹஸ்பதி, இந்த்ரன், அக்நி இவர்களுக்கு பூஷா எனும் தேவதையின் அருளால் ஆயுள், தேஜஸ், நற்புத்தி மற்றவை அடைந்தனர் அதுபோல் இந்த மந்த்ர வபனத்தால் நீயும் அனைத்தையும் அடைந்தவனாகிறாய்.
உபநயனம்
உபவீதி - ப்ராசீனாவீதி - நிவீதி
ப்ரஹ்மா தோன்றும்போNது உபவீதத்துடன்தான் தோன்றினார். வேதமே ப்ரஹ்மா, ப்ரஹ்மாவே வேதம், அந்த வேதத்தை அத்யயனம் பண்ணவேண்டியிருப்பதால் உபவீதம் அவசியம். யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் - யஜ்ஞத்துக்காக வேண்டி உபவீதி, இதைப்போண்டுண்டுதான் யஜ்ஞம் பண்ணணும், அப்போதுதான் அதைச் செய்வதற்கு யோக்யதை. உபவீதம் வெறும் கடையில் வாங்கற நு}ல் இல்ல, அது பரம பவித்ரமானது, அதைச் செய்வதற்கு முறைகள் எல்லாம் சொல்லியிருக்கு, பஞ்சை எப்படி எடுக்கணும், பூணு}ல் எப்படி முறுக்கணும், எவ்வளவு அளவு வைக்கணும், எந்த காலத்துல பண்ணணும், என்னென்ன மந்திரம் சொல்லி முடி போடணும்றதுக்கெல்லாம் சாஸ்த்ரம் இருக்கு, ப்ரஜாபதே யத்ஸஹஜம் புரஸ்தாத் - ஆதி காலத்தில் ப்ராஜாபதியான ப்ரஹ்மா தோன்றும்போதே எப்படித் தோன்றினாரோ அப்படி இந்தக் குழந்தைக்கு காலத்தில் உபவீதத்தைப் போட்டு வைத்தோமானால் ஆயுஷ்யம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் - சுத்தமான இதைப்போட்டுக்கொண்ட குழந்தை ஆயுஷ்மானாக இருப்பான். இந்த உபவீதமானது மந்த்ர ப்ரபாவத்தாலே ஆயுசைத் தரக்கூடியது, பலத்தைத் தரக்கூடியது, தேஜஸ்ஸைத் தரக்கூடியதாகும்.
ஆயுர்தாதேவா ஜரஸம் க்ருணாநோ - எப்பொழுதும் நெய்யை விரும்பிச் சாப்பிடும் அக்நி பகவான் இந்த ஸமித்தை ஏற்றுக்கட்டும், தகப்பனார் எப்படி குழந்தையைக் கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போறாரோ அக்நி பகவான் இந்த பையைனை நு}று வயசு வரைக்கும் அழைச்சுண்டு போகட்டும் அதாவது அவனுக்கு தீர்க்கமான ஆயுசை கொடுக்கட்டும் என்று அர்த்தம்.
ஆதிஷ்;டேமம் அஸ்மேவத்வம் ஸ்திரோபவ - கல்லுல (அம்மியில) ஏத்தி நிற்க வைக்கற மந்தரம் - இந்த கல்லுல திடமா நில்லு, கல்லு எப்படி இருக்கோ அதுமாதிரி இந்த குமாரன் சஞ்சல புத்தியில்லாமல் திடமா இருக்கணும். சேனையே வந்து எதிர்த்தாலும் அஞ்சாமல் இருக்கணும், அம்புனால அடிச்சாலும் திடமா இருக்கணும். இப்படி திடமா இருந்தாத்தான் பாடசாலையிலே கொண்டே சேர்த்தாக்க வேதத்தை திடமா கத்துக்க முடியும் இல்லேன்னா அழுதுண்டு ஆத்துக்கு ஓடிவந்துடும்.
அடுத்து அவனுக்கு புதுத்துணிணை உடு;த்த மந்த்ரம்:
யா அக்ருந்தன் அவயன் ... பரிதாத வாஉ. இந்த வஸ்த்ரம் யார் கொடுத்தது? ப்ருஹஸ்பதி ப்ராயச்சது ... ப்ருஹஸ்பதி ஸோமன்ற தேவதைக்கு உபநயனத்தில் கொடுத்தது, நல்ல புதிய நு}லாலே பின்னப்ப்ட்ட பளிச்சின்னு இருக்கக்கூடிய வஸ்த்ரம், உனக்கு வயசு ஆயிடுத்து பெரியவனாயிட்டே இனி இந்த வஸ்த்ரத்தைதான் நீ உடுத்திக்கணும்.
மௌஞ்சி : தர்பத்திலேயே ஒரு வகை. இதால் பின்னப்பட்ட மேகலை எனும் ஒரு ஆபரணம் இடுப்பைச் சுற்றி கட்டவேண்டியது. இயம் துருக்தாத் பரிபாதமாநா ... சுபகா மேகலேயம். பர்தாரஸ்தே மேகலே மாரிஷாமா. இது மணி மேகலையைக் காட்டிலும் ஒஸ்தி. குழந்தையைப் பார்த்து காழ்புணர்ச்சியோடு பேசக்கூடிய வார்த்தைகளுக்கு ‘துருக்தங்கள்” என்று பெயர். அப்படிப்பட்ட துருக்தங்களால் இந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்கு ரiக்ஷயாக இது கட்டப்படுகிறது. ப்ரஹ்மச்சாரி, ஸந்யாசி இருவரும் எப்போதும் பவித்ரம் அவர்களுக்கு தீட்டெல்லாம் கிடையாது. இந்த முஞ்சைப்பில் மேலும் அவனைப் பவித்திரமாக பாவித்து, ஸத்யத்தைக் காக்கும்படியாகவும், பிசாசங்கள், ராக்ஷசர்கள் கிட்டே அண்டாதபடியும் பாதுகாக்கும். இந்த மேகலையைக் கட்டிண்டிருக்கிறவனுக்கு நல்ல மன உறுதியையும் எல்லாவிதமான சௌக்கியத்தையும் கொடுக்கும்.
மான்தோல் கட்ட மந்த்ரம்: மித்ரஸ்ய சக்ஷ{ர் ... ததேஹம். தேஹத்திற்கு நல்ல காந்தியையும், நல்ல கீர்தியையும், புராதனமான புகழையும் சேர்க்கவல்லது.